450 இந்தியர்களை பணிநீக்கம் செய்தது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வந்த இந்தியர்களில் 450 பேரை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை அல்லது 6 சதவிகித ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக முன்பு குறிப்பிட்டிருந்தது.

தற்போது, விற்பனை, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூகுள் நிறுவனத்துக்காக பணிபுரிந்து வந்த இந்தியாவைச் சேர்ந்த 450 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

இது தொடர்பாக பேசிய கூகுள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் சஞ்சய் குப்தா, ”ஜனவரியில் அறிவிக்கப்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையின்படி கூகுளில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து வந்த இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வியாழக்கிழமை பணிநீக்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கூகுள் நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு, மாற்று வாய்ப்புக்காக சமூக வலைதளங்களில் பதிவிட்டதன் மூலம் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்திய ஊழியர்கள் மட்டுமின்றி சிங்கப்பூரைச் சேர்ந்த ஊழியர்களும் இந்த பணிநீக்கப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், கூகுளில் கிளை நிறுவனமான யூடியூப்பின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து சூசன் வோஜ்சிக்கி விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தொடர்ந்து 9 ஆண்டுகளாக யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர். அவருக்கு பதிலாக தற்போது இந்திய – அமெரிக்காவைச் சேர்ந்த நீல் மோகன் யூடியூப் விடியோ பிரிவு தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.