தேர்தலை நடத்தக் கோரி கொழும்புக்கு வந்த மக்கள் மீது கண்ணீர்ப்புகை : நீர்த்தாரை பிரயோகம்.

கடும் மழைக்கு மத்தியில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேர்தலை பிற்போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்.பி திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் வேண்டுமென்றே தேர்தலை பிற்போட முயற்சிப்பதாகவும், அரசாங்கம் பாரிய தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற அச்சம் காரணமாகவே தேர்தலை நடத்தாமல் ஒத்திவைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போராட்டத்திற்கு ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை ஒன்று திரட்டவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.