டபுள் மீனிங்க்ல கோல்டு மெடல் வாங்கிருப்பாரு போலயே!… வாலி எழுதிய பாடல்கள்…

தமிழ் சினிமாவின் பழம்பெரும் கவிஞராக திகழ்ந்து வந்தவர் வாலி. இவரை வாலிப கவிஞர் என்று அழைப்பார்கள். காலத்திற்கு ஏற்றார் போல் தன்னை அப்டேட் செய்து கொண்டதால் வாலியின் வரிகள் மிகவும் இளமையாகவே இருக்கும்.

கிட்டத்தட்ட 4 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதிய பெருமைக்கு சொந்தக்காரரான வாலி, தனது வரிகளின் மூலம் புத்துணர்ச்சி ஊட்டுவது மட்டுமல்லாது சிந்தக்கவும் வைப்பவர். எனினும் ஒரு கவிஞர் சில நேரங்களில் தனது பிழைப்பிற்காக பாடல் எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். வாலிக்கும் அதில் விதிவிலக்கு இல்லை.

ஆதலால் வாலி, இளைஞர்களை கவரும் வண்ணம் பல டபுள் மீனிங் பாடல்களை எழுதியுள்ளார். அதில் நம்மை கிருகிருக்க வைக்கும் அளவுக்கு பல வரிகளை எழுதியுள்ளார் வாலி. அப்படி அவர் எழுதிய கிளுகிளுப்பான பாடல் வரிகள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

1994 ஆம் ஆண்டு வெளியான பிரபு தேவாவின் “இந்து” திரைப்படத்தில் தேவாவின் இசையில் “மெட்ரோ சேன்னல்” என்ற மிகப் பிரபலமான பாடலை வாலி எழுதியிருந்தார். அந்த பாடலில் இப்படி சில வரிகள் வருகிறது…

“உன் கிட்ட பேட் இருக்கு, என் கிட்ட பந்து இருக்கு, முடிஞ்சாக்க அடிச்சிடு அடிச்சிடு, அவுட் ஆனா ஒதுங்கிடு ஒதுங்கிடு”

இவ்வாறு இலைமறைக்காயாக அந்தரங்க விஷயத்தை இந்த வரிகளால் மிகவும் நாசுக்காக எழுதியுள்ளார் வாலி.

அதே போல் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற இன்னொரு பாடலான “ஏ குட்டி முன்னால நீ” என்ற பாடலில் இப்படி சில வரிகள் வருகிறது.

“உரலு ஒன்னு அங்கிருக்கு, உலக்க ஒன்னு இங்கிருக்கு, நெல்லு குத்தும் நேரம் எது சொல்லுடி என் சித்திரமே” என்று ஆண் பாடுகிறார். அதற்கு அந்த பெண் எப்படி பதில் சொல்கிறார் என்றால்,

“பல்லு குத்த பவுசு இல்ல, பாவம் நீதான் விடல பையன், நெல்லுக் குத்த இடம் கொடுத்தா மாட்டிக்குவ உரலுக்குள்ள” என்று பதில் பாடுகிறார். இவ்வாறு நாட்டுப்புற பகுதிகளில் புழங்கும் கூத்து பாடல்களுக்கு இணையாகவும் மிக நகைச்சுவையாகவும் எழுதியுள்ளார் வாலி.

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான “உன்னாலே உன்னாலே” திரைப்படத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் “வைகாசி நிலவே” என்ற மெலோடி பாடலை எழுதியிருந்தார் வாலி. இதில் இப்படி சில வரிகள் வருகிறது..

“கனி எதற்காக கணிந்தது அணில் கடித்திடத்தானே” என்று காதலி தனது காதலனுக்கு மோகத்தை தூண்டுவது போல் இந்த வரிகளை எழுதியிருக்கிறார் வாலி.

1992 ஆம் ஆண்டு வெளியான “சூரியன்” திரைப்படத்தில் தேவாவின் இசையில் “பதினெட்டு வயது” என்று தொடங்கும் ஒரு பாடலை எழுதியிருந்தார் வாலி. இதில்…
“மாங்கனிச் சாறும் செவ்விள நீரும் மேலும் கீழும்தான் இனிக்க, அதை மீண்டும் மீண்டும் நீ எடுக்க” என்று சில வரிகளை எழுதியிருக்கிறார்.

ஏதோ பழங்களை குறித்துத்தான் எழுதியிருக்கிறார் என்றால் அதற்குள் வேறு மாதிரியான வில்லங்கமான சில அர்த்தங்களை பொதித்திருக்கிறார் வாலி. இவ்வாறு டபுள் மீனிங்கில் கோல்டு மெடலே வாங்கியது போல் பாடல் வரிகளின் மூலம் பல லீலைகளை செய்திருக்கிறார் வாலி.

Leave A Reply

Your email address will not be published.