படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில் சிக்கிய அமிதாப் பச்சனுக்கு காயம்

இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அமிதாப் பச்சன் தற்போது புராஜெக்ட் கே என பெயரிடப்பட்ட படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதற்காக ஐதராபாத் நகரில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

அதில் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது, நடிகர் அமிதாப்புக்கு வலது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது. தசை பகுதியும் பாதிப்படைந்து உள்ளது.

இதனால், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவர் உடனடியாக ஐதராபாத் நகரில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சி.டி. ஸ்கேன் செய்த பின்னர் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர். இதனை தொடர்ந்து, அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். வீட்டிலேயே இருந்தபடி ஓய்வு எடுத்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.