வலிகாமம் கால்பந்தாட்ட லீக் போட்டி முடிவுகள்

கால்பந்து மத்தியஸ்தர்களாக இருந்து மைதானத்தில் மத்தியஸ்தம் செய்து கொண்டிருந்த வேளையில் மரணமடைந்த சுன்னாகத்தினைச் சேர்ந்த ஐயாக்குட்டி செல்வராசா மற்றும் இணுவிலைச் சேர்ந்த அப்புத்துரை தம்பிராஜா ஆகிய இருவர்களினதும் ஞாபகர்த்தமாக வலிகாமம் கால்பந்தாட்ட லீக் நடாத்தும் அணிக்கு 7பேர் பங்கு பற்றும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில்ஞானமுருகன்,யங்கென்றிஸ்,வளர்மதிவிளையாட்டுக் கழக அணிகள் வெற்றி பெற்றன.

சனிக்கிழமை தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம் பெற்ற
முதலாவது ஆட்டத்தில் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து காளியம்பாள் விளையாட்டுக் கழக அணி மோதியது.இதில் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழக அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டாவது ஆட்டத்தில் இளவாலை யங்கென்றிஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து அண்ணா விளையாட்டுக் கழக அணி மோதியது இதில் இளவாலை யங்கென்றிஸ் விளையாட்டுக் கழக அணி
12:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மூன்றாவது ஆட்டத்தில்,
வளர்மதி விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து நாமகள் வினையாட்டுக் கழக அணி மோதியது இதில் வளர்மதி விளையாட்டுக் கழக அணி 3 : 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.