சஜித் கட்சியின் தேசியப்பட்டியலில் அதிகமான பேராசிரியர்கள் நியமனம்! – 41 பேரின் பெயர்கள் உள்ளடக்கம்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் அதிகமான பேராசிரியர்கள் தேசியப்பட்டியல் எம்.பிக்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

அவர்களின் பெயர்ப்பட்டியலை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ இப்போதே தயாரித்து வைத்துள்ளார். அதன் அடிப்படையில் 41 பேராசிரியர்கள் சஜித்தின் தேசியப்பட்டியலில் உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரம் குருநாகலில் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது அதில் கவனிக்கத்தக்க முக்கிய அம்சம் ஒன்று இருந்தது. அதுதான் 25 பேராசிரியர்கள் அந்த மேடையில் அமர்ந்திருந்தமை.

அப்படியென்றால் சஜித் எப்படிப்பட்ட ஆட்சி ஒன்றுக்குத் தயாராகின்றார் என்பதைப் புரிந்துகொள்ளலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரம் தெரிவிக்கின்றது.

முழுமையான நல்ல கல்விமான்களை உள்ளடக்கிய அரசு ஒன்றை அமைப்பதற்கே அவர் தயாராகி வருகின்றார் என்று அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.