இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்கள் மீது கற்கள் வீச்சு..!

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள தூதரகங்களில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் அத்துமீறி உள்ளனர். குறிப்பாக லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது கற்களை வீசிய காலிஸ்தான் ஆதரவாளர்கள், தேசிய கொடியை இறக்கி அவமதித்தனர்.

இதே போன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் மீதும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். தூதரகத்தின் கதவு, ஜன்னல்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர்.

இச்சம்பவங்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தூதரகங்களில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அந்நாட்டு அரசுகளுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.