சீருடையில் கஞ்சா விற்ற, பளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

கடமை நேரத்தில் சீருடையில் கேரள கஞ்சா விற்பனை செய்த கிளிநொச்சி பளை பொலிஸ் நிலைய , இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் , கடந்த 23 ஆம் திகதி கிளிநொச்சி புதுக்கட்டு பகுதியில் கலால் திணைக்கள அதிகாரிகளால் (Excise Officers) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், கொழும்பில் இருந்து வந்த கலால் அதிகாரிகள் குழு, கேரள கஞ்சா வாங்குபவர்கள் போல் நடித்து , இரண்டு காவல்துறை அதிகாரிகளிடமும் கஞ்சா வாங்கும் போது கைது செய்தனர்.

இரு போலீஸ் அதிகாரிகளையும் சோதனையிட்டபோது, அவர்கள் வசமிருந்து ​​2 கிலோ 200 கிராம் கேரள கஞ்சாவை கலால் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலால் அதிகாரிகளால் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் காணாமல் போனமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் முன்னர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்ட சில மணித்தியாலங்களின் பின்னர் இரு அதிகாரிகளும் கலால் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பளை பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.