தனிமைப்படுத்தல் சட்டத்தினை அரசாங்கம் சாதகமாக பயன்படுத்துவதாக jvp குற்றச்சாட்டு

தனிமைப்படுத்தல் சட்டத்தினை அரசாங்கம் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களை கவனத்திற் கொள்ளாது கலந்துக்கொண்டதனை கட்டுப்படுத்தாத அரசாங்கம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதனை தடுத்து நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்பாட்டங்கள் எவ்வாறு ஈவிரக்கமற்ற முறையில் முறியறிக்கப்பட்டது என்பதனை நாட்டு மக்கள் அவதானித்துக்கொண்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளளார்.

இதன் மூலம் தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பிலான அரசாங்கத்தின் இரட்டை வேடம் அம்பலமாக்கப்பட்டுள்ளதாக அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமைச்சர்கள் சிலர் இணைந்து இசை நிகழ்ச்சியொன்றை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மக்களை அழைத்துள்ளதாக குறிப்பிட்ட JVPயின் தலைவர் அரசாங்கத்திற்கு ஆதரவான குறித்த இசை நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் செல்லக்கூடும் எனவும் முன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments are closed.