பதுளையில் இரு பாடசாலை மாணவர்களை பலிகொண்ட பிக் மேட்ச் அணிவகுப்பு (Video)

பாடசாலை கிரிக்கட் (பிக் மேட்ச்) போட்டியின் போது வீதியில் வாகன கண்காட்சியில் ஈடுபட்டு கொங்கிறீட் தூணில் மோதி விபத்துக்குள்ளானதில் 08 மாணவர்கள் உடல் நசுங்கிய நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 06 பேரில் இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பதுளை கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் உள்ள புதிய மைதானத்தில் இன்று (01) பிற்பகல் சஃபாரி வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.அடுத்த மாணவன் வைத்தியசாலைக்கு அனுமதித்ததும் உயிரிழந்துள்ளார்.

மேலும் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகனத்தில் அதிகமானோர் பயணித்ததும் விபத்துக்கு ஒரு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா கல்லூரிக்கும் பதுளை தர்மதூத கல்லூரிக்கும் இடையிலான 74 ஆவது ‘ஊவா சுலோஹித சங்க்ராமய’ வருடாந்த கிரிக்கெட் போட்டி இறுதி நாளான (01) இன்றுவரை நடைபெற்று வந்தது.

பதுளை பொலிஸ் வின்சென்ட் டயஸ் மைதானத்தில் பாடசாலை கிரிக்கட் போட்டியுடன் (பிக் மேட்ச்) மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த வாகன பேரணி மாநகரசபைக்கு சொந்தமான வெற்று காணியில் கோலாகலமாக சென்று கொண்டிருந்ததாக இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்தனர்.

உல்லாசமாக வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, ​​ஒரு பகுதியில் இருந்த கான்கிரீட் தூணில் சஃபாரி வண்டி மோதி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. வண்டியில் பயணித்த 08 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

வாகன விபத்தில், வாகனத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தனால் அவர்கள் நசுங்கி, உயிர் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சில மாணவர்கள் டியூஷனுக்கு செல்வதாக வீட்டில் கூறி இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதுளையில் இரு பாடசாலை மாணவர்களை பலிகொண்ட பிக் மேட்ச் அணிவகுப்பில் விபத்து எப்படி நடந்தது?

Leave A Reply

Your email address will not be published.