உணவக உரிமையாளர் ஒருவர் சுட்டுப் படுகொலை! – கொழும்பில் பயங்கரம்.

கொழும்பு, பெல்லன்வில பகுதியில் இன்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 55 வயதுடைய உணவக உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த மேற்படி நபர், உடனடியாகக் களுபோவில போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், அங்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காததால் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.