கொரோனா வைரஸின் பாதிப்பில் சென்னையை தாண்டியது பெங்களுர்

இந்தியாவின் பெங்களுரில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு 3 ஆயிரம் என்ற அளவில் இருப்பதாக கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 89 ஆயிரத்து 232 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 9,319 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 98 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு மேலும் 95 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,393 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவிலும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
தினசரி 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள அதேவேளை கொரோனாவினால் பாதிக்கப்பட்டடோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கியுள்ளது.

குறிப்பாக பெங்களுரில் தினசரி பாதிப்பு 3 ஆயிரம் என்ற அளவில் உள்ளதால் சென்னையை பெங்களூரு பின் தள்ளிவிட்டதாக சுகாதாரத்துறை மேலும் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் வரை 1 லட்சம் 40 ஆயிரமாக இருந்த அதேவேளை பெங்களுரில் நேற்றைய தினத்துடன் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 47 ஆயிரத்து 581 ஆக உள்ளது.

ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகமாகவும், பெங்களுரில் குறைவாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.