லிட்ரோ , லாஃப் கேஸ் ஆகியவற்றின் விலை குறைப்பு

லிட்ரோ (கேஸ்) எரிவாயுவின் விலையை நாளை (04) நள்ளிரவு முதல் குறைக்கவுள்ளதாக லித்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பு எரிவாயு விலை சூத்திரத்தின் படி பொருந்தும்.

12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1000 ரூபாய் அளவு குறைக்கப்படும் என எரிவாயு நிறுவனத்தின் தலைவர் குறிப்பிடுகின்றார்.

அதே சமயம் லாஃப் கேஸ் நிறுவனமும் , காஸ் விலையை குறைக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி, இந்த விலை குறைப்பை நாளை 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுல்படுத்த நிறுவனம் உத்தேசித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.