இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே அருணாச்சல பிரதேசம் : அமெரிக்கா

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தம் என சீனா நீண்டகாலமாக உரிமை கொண்டாடி வருகிறது. அதனை தெற்கு திபெத் என கூறி வருகிறது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை சீனா மாற்றி அறிவிப்பை வெளியிட்டது. அதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

அதனைதொடர்ந்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவோ நிங், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’ஜாங்னான் சீனாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்றும் இறையாண்மை உரிமைகளுக்கு உட்பட்டே இவை செயல்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இது மற்றொரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக கருத்து கூறியுள்ள வெள்ளை மாளிகை, இந்திய பகுதியான அருணாசல பிரதேசத்தின் மீது உரிமை கோரும் சீனாவின் முயற்சிகளை அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்துள்ளது. இது ஒரு தலைபட்சமான சீனாவின் நடவடிக்கை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.