இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது – ஆளுநர் ஆர்.என்.ரவி

மிகவும் பழமையான தமிழ் மொழி மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்கும் மாணவர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் கலந்துரையாடினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ”தமிழ்நாடு தரிசனம்” என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழ்நாடு திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.

பிறமொழி பேசுபவர்கள் தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்தை கற்றுக்கொள்ள நினைப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய அவர், தமிழை ஆழமாக படிக்க வேண்டும் என்றும் தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது . மிகவும் பழமையான தமிழ் மொழி மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது என்றும் ஆளுநர் தெரிவித்தார்

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு தமிழ் தரிசனம் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.