பொது வேட்பாளர் போட்டியால் ‘மொட்டு’க்குள் பூகம்பம்!

அரசு உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்துவிட்டு 2024 ஆம் ஆண்டு இறுதியில் இடம்பெறப் போகும் ஜனாதிபதித் தேர்லுக்கான வேலையில் இப்போதே இறங்கி இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

அரசின் பொருளாதார நகர்வுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தேர்தலுக்கான ஏற்பாட்டையும் – அந்தத் தேர்தலை எப்படியாவது வென்றுவிட வேண்டுமென்ற அரசின் உணர்வையும் வெளிப்படுத்தி நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் பொது வேட்பாளராகத் தான் இறக்கப்பட்டு வெல்வதற்கான வியூகத்தை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வகுத்து வருகின்றார். இரு கட்சிகளும் கொள்கையளவில் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

இருந்தும், ரணிலுக்குத் தலையிடி கொடுக்கும் வகையில், புதுப் பிரச்சினை ஒன்று இப்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் எழத் தொடங்கியுள்ளது. அதுதான் வேட்பாளர் போட்டி.

பொது வேட்பாளராகக் ரணிலைக் களமிறக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இப்போது வரை இணங்கியுள்ள போதிலும், அக்கட்சிக்குள் இருக்கின்ற பஸில் ராஜபக்சவுக்கு ஆதரவான தரப்பு பஸிலையே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற ஒரு கோஷத்தை முன்வைக்கத் தொடங்கியுள்ளது.

அவரது அமெரிக்காப் பிரஜாவுரிமையை இப்போதே இரத்துச் செய்து அதற்காகத் தயாராகுமாறு அந்தத் தரப்பு பஸிலுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது என அறியமுடிகின்றது.

இந்தப் பிரச்சினை எதிர்வரும் நாட்களில் மெல்ல மெல்ல வளர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பெரும் பூதாகாரத்தை ஏற்படுத்தும் என்று அறியமுடிகின்றது.

Leave A Reply

Your email address will not be published.