2023 குரு பெயர்ச்சி பொது பலன்கள்.

குருபகவான் வரும் 22. 4 2023 அதிகாலை 5:14க்கு மீன ராசியில் இருந்து, மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

மிதுனம், சிம்மம், துலாம் ,தனுசு , மீனம் இந்த ஐந்து ராசிக்காரர்களும், மிக நல்ல யோக பலனை அடைய இருக்கிறார்கள்.

மேற்சொன்ன ஐந்து ராசிக்காரர்களுக்கும் பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வருமானம் வரும் காலகட்டங்களில் ,அதை சேமித்து வைப்பது,எதிர்காலத்தை சிறப்பானதாக்கும்.

குரு பலம் வந்து விட்டதால் திருமண வயதை ஓட்டி, சுயசாதகத்தில் களத்திர பாவகங்கள் நன்றாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு திருமணமும், குழந்தை பாக்கிய அமைப்புகளும் விரைவில் கிடைக்கப்பெறும்

மகர, கும்ப ராசிக்காரர்கள் சாதகமாக அல்லாத பலனும், பாதகமாக இல்லாத பலனும் என்ற நிலையில் ,சமநிலை அமைப்பில் பலனை பெறுவர்.

விருச்சிக ராசிக்கு குரு ஆறில் மறைந்தாலும் ,தன்னுடைய ராசிநாதன் வீட்டிலேயே மறைகிறார் என்று அமைப்பிலும்,செவ்வாய் குருவிற்கு நட்பு கிரகம் என்பதாலும், குரு ஆறில் மறைவது ,விருச்சிக ராசிக்கு பெரிய அளவில் பாதிப்பை தராது. சுப கடனை ஏற்படுத்தக்கூடிய அமைப்பில் இருக்கும் . அதை நல்ல முறையில் உபயோகப்படுத்திக் கொள்ளவும்.

மேஷ ராசிக்கு, ஜென்மத்தில் குரு வந்தாலும், ராசிக்கு பாக்யாதிபதி என்பதால் ,பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.

கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமசனியுடன், ராசிக்கு பத்தாம் இடத்தில் குரு அமர்வதால், தொழில் சார்ந்த அமைப்புகளில், மிக மிக எச்சரிக்கை தேவை.

புதிய தொழில் ஆரம்பிப்பதும், புதிய முதலீடு செய்வதும் தற்போதைய நிலையில் நல்ல பலனை நிச்சயமாக தராது என்பதால் கடக ராசிக்காரர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த குரு பெயர்ச்சியில் கன்னி, ரிஷப ராசிக்காரர்கள் கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணத்தைத் தேவையறிந்து சிக்கனமாக செலவழிப்பது நல்ல பலனை தரும்.

குழந்தைகளின் வழியில் சில தொந்தரவுகள் ஏற்படும் என்பதால் ,அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லது.

குரு ,சுய ஜாதகத்தில் பலமாக இருப்பவர்கள் , கவலைப்படத் தேவையில்லை.

உங்கள் லக்னத்திற்கு குரு யோக கிரகமாக இருந்தாலும் கோச்சார குரு பெரிய அளவிற்கு பாதிக்காது.

குரு பாதகமான நிலையில் இருப்பவர்கள் ,ஒருமுறை உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில், திருச்செந்தூர் சென்று செந்தில் வேலவனை வணங்கி, குருவிற்கு கொண்டக்கடலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வருவது, சகல தோஷத்தையும் சரிகட்டும்.

சுய ஜாதகத்தில் நல்ல யோக தசா புத்திகள் மற்றும் பாதகமான தசா புத்திகளுக்கு ஏற்ப, குருபலன் ஏற்ற இறக்கமாக அமையும்.

சுயஜாதகமே தூக்கி பேசும்.

ஏழரைச் சனி, அஷ்டம சனி நடக்கும் போது சனியின் தாக்கமே அதிகம் இருக்கும் என்பதால் ,மீன ராசிக்கு இரண்டாம் இடமான தனஸ்தானத்தில் குரு வந்தாலும், ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் உள்ளோம் என்பதை அறிந்து ,அதற்கு ஏற்ப தேவை அறிந்து செலவழித்துக் கொள்வது நல்லது.

குறிப்பு: மேற்சொன்ன பலன்கள் எல்லாம் ,ராசிக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் ,லக்னத்திற்கு பொருந்துமா? என்ற கேள்வியை யாரும் கேட்க வேண்டாம்.

ராசிக்கு தான் கோச்சாரம். லக்னத்திற்கு சுய ஜாதகம்.

Leave A Reply

Your email address will not be published.