ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2ம் நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2ம் நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் இந்த நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், இந்நிறுவனத்துடன் திமுக தலைமை முக்கியப் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்தசூழலில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்திலும், சென்னை நீலாங்கரையில் உள்ள அந்நிறுவன இயக்குநர் பாலாவின் வீட்டிலும் அதிகாலை முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள பாலாவின் உறவினர் மற்றும் மாமனார் வீட்டிலும் சோதனை தொடர்கிறது. இந்த இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.