இடமாற்றத்துக்கு எதிராக அஜித் ரோஹண போர்க்கொடி!

இடமாற்ற உத்தரவுகளை வழங்குவதற்குப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகாரம் இல்லை என்று தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்கவுக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அதன்படி, அமைச்சின் இடமாற்ற உத்தரவை ஏற்றுக்கொள்வது கட்டாயம் இல்லை எனவும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண உள்ளிட்ட 7 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்வதற்கு நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, இதற்கு எதிரான இந்தக் கடிதத்தைப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அரசமைப்பின் மூலம் பொலிஸ் அதிகாரிகளின் பதவிகளை மாற்றுவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.