2வது டெஸ்டில் வலுவான நிலையில் இலங்கை.

இலங்கை-அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் ஆடிய அயர்லாந்து 492 ரன்னில் ஆல் அவுட்டானது. பார் ஸ்டிர்லிங் 103 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கர்டிஸ் கேம்பெர் 111 ரன்னில் வெளியேறினார். கேப்டன் பால்பிரின் 95 ரன்னில் அவுட்டானார். லார்கன் டக்கெர் 80 ரன்னுடனும் எடுத்தனர். டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து 400 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்முறையாகும். அத்துடன் இன்னிங்சில் இரு அயர்லாந்து வீரர்கள் சதம் காண்பதும் இதுவே முதல் நிகழ்வாகும்.

இலங்கை சார்பில் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ, அசிதா பெர்னாண்டோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் கருணரத்னே, நிஷான் மதுஷ்கா ஆகியோர் நிதானமாக ஆடினர். இருவரும் சதமடித்து அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு 228 ரன்கள் சேர்த்த நிலையில் கருணரத்னே 115 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. மதுஷ்கா 149 ரன்னும், குசால் மெண்டிஸ் 83 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.