செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்… ஆதாரத்தை கண்டுபிடித்த சீன ரோவர்.

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான புதிய ஆதாரங்களை சீனாவின் ஜுராங் ரோவர் கண்டறிந்துள்ளது. செவ்வாயில் உள்ள மணல் திட்டுகளை ஆய்வு செய்தபோது, அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன.

இருப்பினும் ஜுராங் ரோவர் நேரடியாக பனியாகவோ, உறைந்த நிலையிலோ நீரைக் கண்டறியவில்லை. உப்பு நிறைந்த குன்றுகளின் மேற்பரப்பு அடுக்கில், நீரேற்றப்பட்ட சல்பேட்டுகள், நீரேற்றப்பட்ட சிலிக்கா, இரும்பு ஆக்சைடு தாதுக்கள் மற்றும் குளோரைடுகளால் நிறைந்துள்ளதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் கொண்ட சில பகுதிகள் இருப்பதை இந்த புதிய கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. செவ்வாய் கிரகத்தில் பூமியைப் போன்ற காலநிலை இருந்ததாகவும், சுமார் மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அதன் மேற்பரப்பில் கடல் பாய்ந்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் நீண்ட காலமாக நம்புவதாக சீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் காலநிலை மாற்றங்களால் அது உறைந்து, அவற்றின் பெரும்பாலான பகுதி கிரகத்தின் வெளிப்புற அடுக்கில் சிக்கியிருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். செவ்வாய் கிரகத்தில் குறைந்த அட்சரேகைகளில் திரவ நிலையில் நீர் இருப்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை.

இருப்பினும், செவ்வாய் கிரகத்தின் பரிணாம வரலாற்றை புரிந்துகொள்வதில் சமீபத்திய இந்த ஆராய்ச்சி திருப்புமுனையாக இருக்கும் என நம்பப்படுகிறது. சீனாவின் ஜுராங் ரோவர் கடந்த 2021ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.