12 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்.

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி நேற்று பகல்-இரவு ஆட்டமாக கராச்சியில் நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. இமாம்-உல்-ஹக் 90 ரன்னும், கேப்டன் பாபர் ஆசம் 54 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 3 விக்கெட்டும், ஆடம் மில்னே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டாம் ப்ரூடெல் 65 ரன்னும், கேப்டன் டாம் லாதம் 45 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள். அந்த அணி 196 ரன்னுக்கு (41.2 ஓவர்) 6 விக்கெட்டை இழந்தது. கோல் மெக்கோஞ்சி கடைசி வரை போராடினார்.

இதையும் படியுங்கள்: ஐபிஎல் தொடரில் வரலாற்று சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ் நியூசிலாந்து 49.1 ஓவரில் 261 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. மெக்கோஞ்சி 45 பந்தில் 64 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். அதனால் பாகிஸ்தான் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த அணி முதல் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் வென்று இருந்தது. இந்த ஹாட்ரிக் வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது. இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி வென்று சாதனை படைத்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது போட்டி நாளை நடக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.