தாயகத்தில் உள்ள வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு.

சுவிஸ் நாட்டின், வோ மாநிலத்தின் லவுசான் நகரில் அமைந்துள்ள சிறீ கற்பகவிநாயகர் ஆலய நிர்வாகத்தினர் தாயகத்தின் சமூக செயற்பாட்டாளர்கள் ஊடாக, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் கற்றல் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.

அதன் முதற்கட்டமாக, மன்னார் மாவட்டத்தின் பின் தங்கிய பிரதேச செயலகப் பிரிவான மடுப் பிரதேச செயலகப் பிரிவின் பாலம்பிட்டிக் கிராமத்தில் அமைந்துள்ள மன்/ தட்சணாமருதமடு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட ஐம்பது மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற இந்த உதவிகள் வழங்கும் நிகழ்வில், பாடசாலையின் உப அதிபர், ஆசிரியர் ஆகியோருடன் சமூக செயற்பாட்டாளர்களான இ. அந்தோனிப்பிள்ளை (கொன்சால்), கா. வேலும்மயிலும் (மயிலன்), ச. ஜெயசீலன் (சத்தியபாலன்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இரண்டாம் கட்டமாக, வவுனியா மாவட்டத்தின் தொலைதூர எல்லைக் கிராமமான பூம்புகார் கிராமத்தில் அமைந்துள்ள வவு/ பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட ஐம்பது மாணவர்களுக்கும் தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி உதவிகள் வழங்கும் நிகழ்வில், பாடசாலையின் அதிபருடன் சமூக செயற்பாட்டாளர்களான ஓய்வு பெற்ற கிராம சேவையாளரும் முன்னாள் காந்தீயச் செயற்பாட்டாளருமான திரு. கணபதிப்பிள்ளை, த. யோகராஜா, வே. குகதாசன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 28.04.2023 அன்று இடம்பெற்ற மேற்படி இரு நிகழ்வுகளிலும், சமூக செயற்பாட்டாளர்கள் ப. சிறீதரன், இ. தயாபரன் ஆகிய இருவரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.