சுமார் 800 வருடங்கள் பழமை வாய்ந்த மரம்.

சுமார் 800 வருடங்கள் பழமை வாய்ந்த மரம்

மன்னார் பள்ளிமுனையில் உள்ள பெருக்க மரம் சுமார் 800 வருடங்கள் பழமை வாய்ந்தது 7.5 மீற்றர் உயரமும் 19.5 மீற்றர் சுற்றளவும் கொண்ட இந்த மரம், அரேபிய வணிகர்களால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.

அரேபியர் காலத்துக்கு உரித்தானதாக மன்னார் மாவட்டத்தின் பள்ளிமுனை கிராமத்தின் பிரதான வீதியின் அருகில் அமைந்துள்ள பெருக்க மரம் தென்னிலங்கையில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் மன்னாருக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.

பயோபவ் (Baobab) என்பது இதன் பெயர். இப்பெருக்க மரம் தென்னாசியாவிலேயே மிகப் பெரிய சுற்றளவை உடையது. மிகவும் பிரமாண்டமானதாக மட்டுமன்றி அழகான தோற்றத்திலும் காணப்படுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இதை வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.

2003 இல் நடத்தப்பட்ட ஆய்வின் படி, நாட்டில் சுமார் 40 பயோபவ் மரம் எனப்படும் பெருக்க மரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் 34 மரங்கள் மன்னார் பகுதியில் உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.