புதிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி.

இதுவரை பதவியில் உள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் அனைத்து அதிகாரிகளுக்கும் பதவி விலகும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

புதிய பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

புதிய பொலிஸ் ஆணைக்குழு நாளை கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இதுவரையில் பொது பாதுகாப்பு அமைச்சின் மையப்படுத்தப்பட்ட பொலிஸ் தொடர்பான அதிகாரங்கள் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவின் கீழ் வரவுள்ளது.

ஊழல் நிறைந்த பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கியுள்ள பொலிஸாருக்கு மாற்றம் தேவை எனவும், புதிய பொலிஸ் ஆணைக்குழு நியமனத்திற்காக பொலிஸாரே எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.