பாஸ்போர்ட் கியூ முடிவுக்கு வருகிறது.. பாஸ்போர்ட்டுகளை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..

ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் கடவுச்சீட்டை இணையத்தின் வழி விண்ணப்பிப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகைப்படங்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை உரிய முறையில் அனுப்பி வைத்ததன் பின்னர் கடவுச்சீட்டு தபால் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டார்.

அந்த முறை நடைமுறைக்கு வரும் வரை, தற்போது தேதிகளை முன்பதிவு செய்பவர்கள் மட்டும் குடிவரவு திணைக்களத்திற்கு வந்து கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், புதிய முறை அமலுக்கு வரும் போது தற்போது நடக்கும் அனைத்து முறைகேடுகளும் நிறுத்தப்படும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.