பொரளையில் துப்பாக்கிச் சூடு; களனியை சேர்ந்த 53 வயது நபர் உயிரிழப்பு.

பொரளை லெஸ்லி ரணகல மாவத்தை புகையிரத கடவைக்கு அருகில் இன்று காலை இனந்தெரியாத இருவரினால் 53 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் அக்கால அரசியலுடன் தொடர்புடையவர் எனவும், விடுதலைப் புலிகளின் தற்கொலை தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த ஜெனரல் பரமி குலதுங்கவின் படுகொலைக்கு தகவல் வழங்கிய சந்தேகத்தின் பேரில் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் மோட்டார் சைக்கிளில் அப்பகுதிக்கு வந்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களனி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே அவர் உயிரிழந்திருந்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை, தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.