10-ம் வகுப்பு தேர்வு முடிவு வரும்போது விபத்தில் உயிரிழந்த மாணவன்…10 பேருக்கு உடலுறுப்பு தானம்…!

கேரளா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் A+ பெற்று தேர்வு முடிவு வெளியாகி உள்ள நிலையில் சில மணி நேரம் முன்பு மாணவன் உயிர் பிரிந்த சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

கேரளா மாநிலம் கரவாம் வஞ்சியூர் பகுதியைச் சேர்ந்த பினீஷ்குமார் – ரஜினி தம்பதியின் மகன் சாரங். திருவனந்தபுரம் ஆற்றிங்கல் ஆண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவந்துள்ளார். சாரங்க், அவரது தாயுடன் கடந்த ஆறாம் தேதி ஆட்டோவில் பயணித்தபோது திருவனந்தபுரம் அருகே விபத்தில் சிக்கியுள்ளார். அதனால் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்த நிலையில், புதன்கிழமை காலையில் உயிரிழந்தார்.

உயிரிழந்த சாரங்கின் உடல் ஆற்றிங்கல் ஆண்கள் பள்ளியில் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்து. சாரங்கின் சடலத்திற்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். சாரங்கின் உடலுக்கு உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தும்போது, 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. சாரங்க், அனைத்துப் பாடத்திலும் ஏ பிளஸ் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தார்.

தேர்வு முடிவு வெளிவருவதற்கு முன்னதாக சாரங்க் உயிரிழந்திருந்தது அனைவரையும் வேதனையில் துடிக்கவைத்தது. இதற்கிடையில் சாரங்கின் உடல் உறுப்புகள் 10 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது பலரையும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.

சாரங்கின் கண்கள், கல்லீரல் மற்றும் இதய மஜ்ஜை போன்ற உறுப்புகளை 10 பேருக்கு தானம் செய்ய சாரங்கின் பெற்றோர் சம்மதித்தனர். அதனையடுத்து, கோட்டயத்தைச் சேர்ந்த குழந்தைக்காக சாரங்கின் இதயம் வழங்கப்பட்டது. இது போன்று பத்து பேருக்கு புது வாழ்வு அளித்து உயிர் நீர்த்தது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட சாரங், கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து அணி சார்பில் கால்பந்து பயிற்சியில் கலந்து கொண்டு இருந்தார். கால்பந்து வீரராக வேண்டும் என்பது அவருடைய கனவு. சாரங் தனது நெருங்கிய நண்பர்களிடம் மருத்துவமனைப் படுக்கையில் இருக்கும் போது கூட கால்பந்து பூட்ஸ் வாங்க விரும்புவதாக கூறியிருந்தார்.

மகன் இறந்த பெரும் சோகத்திலும் மகனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்து பத்து பேருக்கு புத்துயிர் வழங்க முன் வந்த பெற்றோர்களின் மனித நேயம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Leave A Reply

Your email address will not be published.