‘நாங்கள் ஒன்றாக திட்டம் போட்டு காய் நகர்த்துகிறோம் …’ (அரசியல் பார்வை)

குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ, புவனேகபாஹுவின் அரச மாளிகையை புல்டோசர் மூலம் தகர்த்ததுதான் கோட்டாபாய ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் எதிர்கொண்ட முதல் சோதனை.

கோட்டாவை ஜனாதிபதியாக்கிய புதிய இளம் வாக்காளர்களும் சிங்கள பௌத்த சக்திகளும் துஷாராவை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர்.

ஆனால் சஞ்சீவ , ராஜபக்ச குடும்பத்தின் மிகவும் நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளில் ஒருவரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சிறந்த பாதுகாவலராகவும், ராஜபக்ச குடும்பத்தின் பட்டத்து இளவரசர் நாமலின் அரசியல் பாதுகாவலராகவும் இருந்தார். குருநாகலில் இருந்து வாக்களிக்க வேண்டும் என்ற மஹிந்தவின் தீர்மானத்துடன், குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ குருநாகல் தேர்தல் பணிகளுக்கு இன்றியமையாதவராக இருந்தார்.

இதனால் ஜோன்ஸ்டனின் ஆலோசனையின் பேரில் துஷார சஞ்சீவவை பாதுகாப்பதில் மகிந்த, பசில் மற்றும் நாமல் ஆகியோர் இறுக்கமான நிலையில் இருந்தனர்.

ஆனால் புதிய இளைஞர் வாக்குகளைப் பெறுமாறு கோட்டாவுக்கு ஆலோசனை வழங்கிய ஆலோசகர்கள் துஷார சஞ்சீக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு கோட்டாவை நிர்ப்பந்தித்தனர்.

ஆனால் கோட்டா தனது குடும்பத்தின் செல்வாக்கால் ஆதரவற்றவராக இருந்தார். அப்போது வடமேற்கு ஆளுநர் பதவி ஏ.ஜே.எம். முஸம்மில் வசம் இருந்தது. வடமேற்கு விகாரைகள், மல்வத்து-அஸ்கிரி விகாரைகள் என்பன சிங்கள பௌத்தர் ஒருவரை வடமேற்கு ஆளுநராக நியமிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோட்டாபயவிடம் கேட்டுக்கொண்டனர். எனவே கோட்டா , முசாமிலை ஊவா ஆளுனராக மாற்றியதோடு , அவர் இருந்த இடத்துக்கு யுத்த வீரரான வசந்த கரணாகொடவை நியமித்தார் . தன்னை அனாதரவாக்கிய குருநாகல் மேயருக்கு பாடம் புகட்ட வசந்தாவை , கோட்டா பயன்படுத்தியிருக்கலாம்.

சிறிது காலத்தின் பின்னர் ராஜபக்சவின் அரசியல் பாதுகாவலரான குருநாகல் ஜோன்ஸ்டன் உடன் , வசந்தவும் மோத ஆரம்பித்தார். அந்த நேரத்திலும் கோட்டா வசந்தாவின் பக்கம் நின்றார். வசந்தாவை பதவி நீக்கம் செய்ய கோட்டாவுக்கு ராஜபக்ச குடும்பத்தினர் கடும் அழுத்தம் கொடுத்ததை அடுத்து போராட்டம் தொடங்கியது.
அவ்வேளையில் வசந்த கர்ணாகொடவும், மேயர் துஷார சஞ்சீவவின் அழுத்தத்திற்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் இருந்தார். அரகலய போராட்டம் காரணமாக ராஜபக்ச குடும்பமும் கோட்டாவும் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

ரணில் ஜனாதிபதியாகினார். வசந்த கர்ணகொட பலமானார். துஷார சஞ்சீவைக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அவர் ஒரு குழுவை நியமித்தார். மேயர் துஷார சஞ்சீவவின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் மேயராக முன்மொழியப்பட்டார். வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட போதிலும் மேயர் துஷார சஞ்சீவ பதவி விலகாத நிலையில், ஆளுநரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி துஷார சஞ்சீவவை மேயர் பதவியிலிருந்து வசந்த கர்ணாகொட நீக்கினார்.

ஜோன்ஸ்டனால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மேயர் பதவியில் இருந்து துஷார சஞ்சீவ நீக்கப்படுவதற்கு முன்னர், அமைச்சர் பதவியை பெற்றுக் கொள்வதே ஜோன்ஸ்டனின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தது. ஜோன்ஸ்டனுக்கு ரணில் அமைச்சுப் பதவி வழங்க மாட்டார் என ரணிலின் ஊடகப் பிரிவு ஊடகங்களில் செய்திகளை பரப்பிய போது பசில் தனது வேலையில் இறங்கினார்.

குருநாகலில் வசந்தா மேலும் இருந்தால் மொட்டுவின் வாக்கு வங்கி வீழ்ந்து ,அரசியல் பலம் போய்விடும் என அஞ்சிய பசில் , ரணிலுக்கும் ஜோன்ஸ்டனுக்கும் இடையே இருந்த பிரச்சனையை சுமூகமாக்க , வசந்தாவை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கி பசிலின் சீடரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவை ஆளுநராக நியமிக்குமாறு ரணிலிடம் கேட்டுக்கொண்டார்.

லக்ஷ்மன் யாப்பா என்பது , பசில் அமைச்சராகிய போது பசிலின் பக்க பலமாக இராஜாங்க அமைச்சராக நியமிக்கும் பசிலின் விசுவாசமான சீடராவார். 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் லக்ஸ்மன் யாப்பா தோல்வியடைந்ததன் காரணமாக பசில் நிதியமைச்சராக பதவியேற்றபோது , பசிலால் லக்ஸ்மன் யாப்பாவை நிதி இராஜாங்க அமைச்சராக்க முடியவில்லை. மாறாக, லக்ஷ்மன் யாப்பாவை ஆலோசகராக ஆக்கி, நிதியமைச்சரின் அலுவலகத்தின் அருகில் உள்ள அறையை லக்ஷ்மன் யாப்பாவுக்கு , பசில் வழங்கினார்.

கோட்டாபய பசில் சொன்னதை எல்லாம் செய்யவில்லை என்பதே உண்மை. ஆனால் இன்று ரணில், பசிலின் வேண்டுகோளை செவிமடுத்து லக்ஷ்மன் யாப்பாவை வடமேற்கு ஆளுநராக நியமித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியை போதியளவு எடுத்து அரசாங்கத்தை பலப்படுத்துங்கள் என்றோம். எனவே நீங்கள் அதைச் செய்ய வேண்டும்…’ (16.05.2023)

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ , வசந்த கர்ணகொட நீக்கப்பட்டமை தொடர்பில் ஜோன்ஸ்டன் பரபரப்பாக ஊடகங்களுக்கு கூறிய கதை இது.

இதனிடையே ‘ ராஜபக்சவினரை முடிவுக்குக் கொண்டு வந்து ரணிலை பலப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி , ரணிலை ஆதரிக்க வேண்டும் என்று ரணிலின் சகாக்கள் கூறுகிறார்கள்…’

ரணிலின் சகாக்களின் பேச்சைக் கேட்கும் ஐ.தே.க உறுப்பினர் ஒருவர் சொன்ன கதை அது.

கவர்னர்களை ரணில் நீக்குவதற்கு ராஜபக்சக்கள் என்றும் எதிர்ப்பு , ரணில் பிரம்பை கையில் எடுப்பார் என்றும், ராஜபக்சவினரின் பலமான கவர்னர்களை ரணில் தூக்கி எறிகிறார் என்றும் ரணிலின் ஊடக செய்தி நிறுவனம் கூறியது. யூ.என்.பி.காரர்களும் அதை நம்பி மகிழ்ந்தனர்.

ஆனால், இந்த ஆளுநர்களை பதவி நீக்கம் செய்ய விரும்புவது ரணில் அல்ல, பசில் தான் என்பது ஐ.தே.கவினர்களுக்குத் தெரியாது.

கோட்டாபயவினால் நியமிக்கப்பட்ட வடக்கின் ஆளுநராக இருந்த ஜீவன் தியாகராஜாவும், கிழக்கின் ஆளுநர் அனுராதா யஹம்பத்தும் அந்த மாகாணங்களில் அரசியல் செய்யவில்லை.

கிழக்கு பௌத்த இடிபாடுகளைக் கண்டுபிடிக்கும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு அனுராதா உதவினார் .

தியாகராஜா வடமாகாண ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் வடமாகாண ஆளுநராக திருமதி சார்ள்ஸ் இருந்தார். பசில்தான் திருமதி சார்லஸை வடக்கின் ஆளுநராக்கினார். கோட்டாபய , திருமதி சார்லஸை நீக்கிவிட்டு தியாகராஜாவை நியமித்ததோடு, பசிலின் ஆலோசனையின் பேரில் திருமதி சார்லஸை தேர்தல் ஆணையத்தில் நியமித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் சிறு வாக்குகளை தடுக்க பசில் மற்றும் ரணிலின் கைப்பாவையாக திருமதி சார்ள்ஸ் ஒளிந்து விளையாடியவர் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. திருமதி சார்ள்ஸின் கண்ணாமூச்சி விளையாட்டுக்கு வடக்கின் ஆளுனர் பதவியை தருவதாக பசில் , திருமதி சார்லஸுக்கு உறுதியளித்திருக்கலாம். அதுதான் இப்போது நடந்துள்ளது.

வாக்கெடுப்பை ஒத்திவைக்க, திருமதி சார்லஸ் மொட்டு மற்றும் யானையை காப்பாற்றினார்.

கிழக்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் பசிலின் அரசியல் பொம்மை. தேர்தல் காலத்தின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரசையும் பசிலையும் டீல் செய்வது செந்திலின் பணியாகும். பசில் , ரணிலிடம் சொல்லி கிழக்கில் வாக்கு டீலுக்காக கிழக்கில் இறக்கி இருக்கலாம்.

‘ரணில் , கோட்டா நியமித்த இராணுவ ஆளுநர்களை உதைத்து எறிந்து காட்டியுள்ளார்…’

இந்த நாட்களில் அதிகமான யூ.என்.பி காரர்கள் அப்படி சொல்லி ஆடுகிறார்கள். மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க ஒரு இராணுவத்தவர்தான். அவர் கோட்டாவின் நெருங்கிய நண்பர். அவரை நீக்க வேண்டாம் என ரணிலிடம் கோட்டா கேட்டுக் கொண்டார். ரணில் கோட்டாவின் பேச்சைக் கேட்டு அவரை நீக்கவில்லை.

‘அதாவது மகிந்த, கோட்டா, பசில் சொல்ற மாதிரியே இதெல்லாம் நடக்குது….’

இப்படித்தான் எல்லாமே நடக்கிறது என்பது தெரிந்தவர்களுக்குத் தெரியும். தென் மாகாண ஆளுநர் பசிலின் சிறந்த சீடரான வில்லி கமகேவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

‘தம் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்து அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட இராணுவ தளபதி கர்ணகொட, மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டியது போல் தூக்கி எறியப்பட்டபோது, ​​அதைப்பற்றி சிங்கள அமைப்புகள் மற்றும் பௌத்த பிக்குகள் ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்…?’

ஏனென்றால், அது ரணிலின் முடிவு அல்ல, ராஜாக்ஷ குடும்பத்தின் முடிவு என்பது அவர்களுக்குத் தெரியும்.

‘நாங்கள் அனைவரும் ஒன்றாக வேலை செய்கிறோம், இணைந்தே வேலை செய்கிறோம்…’

உபுல் ஜோசப் பெர்னாண்டோ

Leave A Reply

Your email address will not be published.