தமிழ் ஒவ்வொரு இந்தியரின் மொழி – பிரதமர் மோடி

மூன்று நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடிக்கு, பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜப்பான், பப்புவா நியு கினி, ஆஸ்திரேலியா நாடுகளின் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை டெல்லி திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் ஆளுயர மாலை அணிவித்து பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர், பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகின் பழமையான மொழி தமிழ் என்றும், ஒவ்வொரு இந்தியரின் மொழி தமிழ் என்றும் பெருமிதம் தெரிவித்தார். மேலும் ‘திருக்குறள்’ நூலின் டோக் பிசின் மொழிபெயர்ப்பை பப்புவா நியூ கினியில் வெளியிடும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகவும் பிரதமர் மோடி மகிழச்சியுடன் தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை (50 ஓவர்கள்) காண ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் மற்றும் அந்நாட்டு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.