புதிய நாடாளுமன்றத்தில் தமிழக செங்கோல்: மத்திய அமைச்சர் அமித் ஷா

டெல்லியில் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியா தனது 75ஆவது சுதந்திர ஆண்டை நிறைவுசெய்த சூழலில் அதனை இன்னும் சிறப்பாக்கும் வகையில் டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கும் நிகழ்ச்சி அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தமிழ்நாட்டில் இருந்து வழங்கப்பட்ட செங்கோல் இடம் பெறும் என கூறினார். சுதந்திரத்தின் அடையாளமாக தமிழ்நாட்டில் தயாரான செங்கோலை மவுண்ட் பேட்டன் நேருவிடம் வழங்கியது பற்றி பிரதமர் மோடி கேள்விப்பட்டதாக அமித் ஷா தெரிவித்தார்.

அந்த தங்க செங்கோலை சோழர்கள் கால நடைமுறையின்படி புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்பட இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

மேலும் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்ட பணியாற்றிய 60,000 பணியாளர்கள் கவுரவிக்கப்பட இருப்பதாகவும் அமித் ஷா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட செங்கோல் வழங்கும் நடைமுறை குறித்த காணொலி திரையிடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.