கர்நாடகாவில் இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. கடந்த 20ஆம் தேதி முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுடன் 8 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

கர்நாடகாவில் 224 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதால், 34 பேரை அமைச்சராக்க முடியும். ஆனால் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உட்பட 10 பேர் மட்டுமே பதவியேற்றனர். அமைச்சரவையில் மீதமுள்ள இடங்களுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய கடும் போட்டி நிலவியது.

இதனிடையே, கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகா ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ள, முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் தனித்தனியே டெல்லி சென்று முகாமிட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து பேசினர்.

இந்த நிலையில், அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் பெறுபவர்களின் பட்டியல் நேற்றிரவு வெளியானது. அதன்படி, 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

அதன்படி, தினேஷ் குண்டுராவ், ஹெச்.கே. பாட்டீல், மகாதேவப்பா, வெங்கடேஷ், கிருஷ்ணா பைரே ஹவுடா ஆகியோர் அமைச்சர்களாகின்றனர்.

ஈஸ்வர் காந்த்ரே, மது பங்காரப்பா, ஷிவ் ஆனந்த் பாட்டீல், என்.ராஜண்ணா, எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன் உள்ளிட்ட 24 பேரும் அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் பெற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.