ரபேல் – இந்திய விமானப் படையில்

பிரான்ஸிருந்து ஜூலை மாதம் 29 ந் தேதி இந்தியா வந்து அடைந்த ரபேல் ஐந்து போர் விமானங்கள் இன்று முறைபடி இந்திய விமானப் படையுடன் இணைக்கப்பட உள்ளன.

அந்த ஐந்து விமானங்களும் இந்திய விமானப்படை 17 ஆம் படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் இணைக்கப்பட் உள்ளன.

முன்னதாக இந்திய வந்துள்ள பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் திரு. புளோரன்ஸ் பார்லி ,மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தலைமையில்  விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்படுகின்றன.
நான்கு ஆண்டுகளுக்கு முன் ரூ 59,000 கோடி மதிப்பில் 36 ரபேல் விமானங்களுக்காக இந்தியா பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே..பல் வேறு கட்டங்களைத் தாண்டி ர்பேல் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.