அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தடுமாறி வீழ்ந்தார் (வீடியோ)

கொலராடோவில் இன்று (02) இடம்பெற்ற அமெரிக்க விமானப்படை அகாடமியின் பட்டமளிப்பு விழாவின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தடுமாறி விழுந்த சம்பவம் ஒன்று குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

921 பட்டதாரி கேடட்களுடன் கைகுலுக்க ஜனாதிபதி சுமார் ஒன்றரை மணி நேரம் நின்று பின் , அந்த இடத்தை விட்டு நடந்து செல்ல முற்பட்ட போது , ஜனாதிபதியின் தொலைத்தொடர்புக்கு ஆதரவாக பயன்படுத்தப்பட்ட கறுப்பு மணல் மூட்டையில் கால் தட்டுப்பட்டு , ஜனாதிபதி தடுமாறி கீழே விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

“அவர் நலமாக இருக்கிறார்,” என்று வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு இயக்குனர் தெரிவித்தார்.

விழுந்த சிறிது நேரத்துக்குப் பிறகு, விழாவின் முடிவில் அவர் எவரது உதவியுமின்றி தனது இருக்கைக்குத் திரும்பிச் சென்றார், பின்னர் தனது வாகன அணிவகுப்புக்குத் திரும்பினார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன, அன்று மாலை வெள்ளை மாளிகைக்குத் திரும்பியபோது ஜனாதிபதி செய்தியாளர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.