ஒடிசா விபத்துக்கான காரணம் தெரிந்தது…ரயில்வே அமைச்சர் தகவல்..!

மேற்குவங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையம் அருகே சென்ற சில நிமிடங்களில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலின் பின் பகுதியில் மோதியது. இதில் கடுமையாக சேதமடைந்த ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, கவிழ்ந்தன. அருகில் உள்ள தண்டவாளங்களிலும், தண்டவாளத்தை ஒட்டிய பள்ளத்திலும் பெட்டிகள் கவிழ்ந்தன.

விபத்து நடந்த போது, அதற்கு எதிர் திசையில் பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் கடைசியில் உள்ள 4 பெட்டிகள் மீது, கோரமண்டல் ரயிலில் இருந்து சிதறிய பெட்டிகள் மோதின.

இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டிகளான A1, A2 மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளான B1 முதல் B6 வரையிலான 8 பெட்டிகள் முழுவதும் சேதமடைந்தன. B7 முதல் B9 வரையிலான 3 பெட்டிகளும் பெருமளவு சேதமடைந்தன. இந்த விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அஷ்வினி வைஷ்ணவ், “ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இதுபற்றி விசாரித்து வருகிறார். ஆனால் சம்பவத்திற்கான காரணத்தையும் அதற்கு காரணமானவர்களையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். மின்னணு இணைப்பு (electronic interlocking) கோளாறால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை விரைவில் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.