ஐநா பொதுச் சபையின் துணைத் தலைவர் பதவி இலங்கைக்கு…(வீடியோ)

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடருக்கான துணைத் தலைவர் பதவியை இலங்கை பெற்றுள்ளது.

193 நாடுகள் ஏகமனதாக இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதியான மொஹான் பீரிஸ் அவர்களை துணைத் தலைவர் பதவிக்கு தெரிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ், ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான 2023 செப்டெம்பர் முதல் 2024 செப்டெம்பர் வரையிலான காலப்பகுதிக்கான துணைத் தலைவர்களில் ஒருவராக பதவி ஏற்பார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் உப தலைவர் பதவிக்கு இவ்வருடம் இலங்கைக்கு மேலதிகமாக 21 நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது கூட்டத்தொடர் செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.