நிறுத்தி வைக்கப்பட்ட காருடன் மினிபஸ் மோதி விபத்து.

நெல்லியடியில் சற்று முன்னர் நடைபெற்ற விபத்து

வடமராட்சி நெல்லியடி முடக்காட்டுச் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்ட காருடன் மினிபஸ் மோதி விபத்துக்குள்ளாகியது.

இச்சம்பவம் சற்று முன்னர் நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த தனியார் போக்குவரத்து மினிபஸ் முடக்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள ரூபின்ஸ் தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்ட காருடன் மோதி விபத்திற்குள்ளானது. விபத்திற்குள்ளான கார் வைத்தியசாலையில் தனது சேவையை ஆற்றவந்த வைத்தியருடையது எனத் தெரியவந்துள்ளது. நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.