என் வாழ்க்கையின் மிகச் சிறந்த இசை நிகழ்ச்சி இது தான். நன்றி மலேசிய மக்களே…

என் வாழ்க்கையின் மிகச் சிறந்த இசை நிகழ்ச்சி இது தான். நன்றி மலேசிய மக்களே என்று பாடகர் கார்த்திக் கூறினார்.

மை இவெண்ட்ஸ் இண்டர்நேஷனல் ஏற்பாட்டில் கார்த்திக் லைவ் இன் கேஎல் எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சுங்கைவாங் மெகா ஸ்டார் அரேனாவில் நடைபெற்றது.

கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த இசை நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.

இரவு 8 மணி முதல் இடைவிடாது பாடி பாடகர் கார்த்திக் மக்களை மகிழ்வித்தார்.

பாடியதும் மக்களை பாட, ஆட வைத்து அனைவரின் கைத்தட்டல்களையும் கார்த்திக் பெற்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய கார்த்திக், என் வாழ்க்கையில் பல இசை நிகழ்ச்சிகளை பல நாடுகளில் படைத்துள்ளேன்.

ஆனால், என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரே இசை நிகழ்ச்சி இது தான்.

அந்த அளவுக்கு மலேசிய மக்கள் அன்பை தந்துள்ளீர்கள். நன்றி மலேசிய மக்களே என்று கூறி கார்த்திக் மேடையில் இருந்து விடை பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.