சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி பல லட்சம் பணம், நகை மோசடி: 2 பேர் கைது

தேனி மாவட்டம் அருகே உள்ள குமுளியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் முகநூல் உள்ளிட்ட சமூக லைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி பல லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகை மோசடி செய்தவர்களை போலீசார் தில்லியில் கைது செய்தனர்.

கேரளம் மாநிலம் பாலாவைச் சேர்ந்தவர் மாத்யூ ஜோஸ் (34), இவர் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் வேலை பார்த்த ஊழியர் குமுளியைச் சேர்ந்த ஷகீர்(24).

இவர்கள் இருவரும் முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் திருமணமான பெண்களிடம் நட்பு வைத்து பழகினர். அப்படி பழக்கத்தின் போது ஹரியாணாவைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் பழக்கமாகி உள்ளார். அவரை குமுளிக்கு வரவழைத்து இருவரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பின்னர் அவரை ஆபாச படமெடுத்து மிரட்டி அவரிடம் 600 கிராம் தங்கம், ரூ.34 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும், ஆபாச படங்களை வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவோம் என்றனராம்.

இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் குமுளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குரியா கோஸ் உத்தரவுப்படி, காவல் ஆய்வாளர் டி.டி.சுனில் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் தேடுவது தெரிந்ததும் இருவரும் தலைமறைவாகினர்.

இருவர் மற்றும் அவரது உறவினர்களின் செல்போன்களை கண்காணித்த குமுளி போலீசார், தில்லியில் தங்கியிருந்த அவர்களை கைது செய்து வியாழக்கிழமை குமுளிக்கு அழைத்து வந்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து பீர்மேடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் ஏமாற்றிய பெண்களின் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.