கோவை முதல் பெண் பஸ் ஓட்டுநர் ஷர்மிளா திடீர் ராஜினாமா.

கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் ஓட்டுநர் ஷர்மிளா பிரபலமாகி வருகிறார்.

இந்த நிலையில் தி.மு.க எம்.பி.கனிமொழி, ஷர்மிளா இயக்கிய பஸ்சில் இன்று பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பஸ்சில் பயணம் செய்தார். பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பஸ்சில் பயணித்தபடியே பேசி சென்றார்.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக பஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்த ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார். திமுக எம்.பி. கனிமொழி பயணித்தபோது பயணச்சீட்டு கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் தனியார் பஸ் உரிமையாளர் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஷர்மிளாவை தனது பணியை ராஜினாமா செய்து உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.