இலங்கையை உலுக்கிய கோர விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமே.

பொலன்னறுவை – மனம்பிடிய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்திற்கு சாரதியின் கவனயீனமே காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பாலத்தில் இருந்து பஸ் ஒன்று ஆற்றில் வீழ்ந்தமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கதுருவெலயிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணிப்பதாக அறிவித்து பயணிகள் ஏற்றப்பட்ட தனியார் பஸ் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ்ஸின் அதிவேக பயணமும், சாரதியின் கவனக்குறைவுமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பஸ் விபத்தினால் காணாமல் போனவர்கள் எவரேனும் இருக்கிறார்களா என்பதை கண்டறியும் வகையில், பஸ் ஆற்றில் விழுந்த இடத்தில் நீர்மூழ்கிக் குழுவினர் தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, விபத்துக்குள்ளான பஸ் நேற்று இரவு (9) கிரேன் உதவியுடன் ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.