பிரிமா மாவு விலை குறைப்பு!

பிரிமா கோதுமை மா நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை இன்று (18) முதல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் அந்த நிறுவனத்தின் கோதுமை மாவை விநியோகிக்கும் அனைத்து விற்பனை முகவர்களுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலையின்படி, நிறுவனம் ஒரு கிலோ பச்சை கோதுமை மாவை மொத்த விலையில் 195 ரூபாய்க்கு விற்கிறது, அதே கோதுமை மா கிலோ 210 ரூபாய்க்கு சில்லறை விலையில் விற்கப்படும் என விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.