பானத்தை வீசிய ரசிகர் மீது மைக்ரபோனை விட்டெறிந்த பாடகி (வீடியோ)

அமெரிக்காவில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியின் போது கார்டி பி என்ற ராப் பாடகி தனது மைக்ரோஃபோனை பார்வையாளர் ஒருவர் மீது வீசுவது செய்திதளங்களில் வைரலாக காண முடிந்தது, அவர் பாடிக் கொண்டிருக்கும் போது அவர் மீது ஒருவர் பானத்தை வீசியதும் , அவர் பானத்தை வீசிய ரசிகர் மீது அவர் கையிலிருந்த மைக்கால் குறி வைத்து தாக்கினார்.

இந்த தருணத்தின் காட்சிகள் சனிக்கிழமை (ஜூலை 29) சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின.

அமெரிக்க ராப்பர் பாடகியான Belcalis Marlenis Almánzar (கார்டி பி) மேடையில் நீண்ட ஆரஞ்சு நிற ஆடை அணிந்திருப்பதைக் காணலாம், கூட்டத்தில் இருந்த ஒரு நபர் ஒரு கோப்பையிலிருந்து திரவத்தை வீசுகிறார்.அதனால் கோபமடைந்த கார்டி பி மைக்கை அவர் மீது விட்டெறிந்தார்.

கூட்டத்தில் இருந்த அந்த நபரைச் சுற்றி பாடகியின் பாதுகாப்பு உறுப்பினர்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர், அதே நேரத்தில் கார்டி பி மேடையில் கோபமாகத் தோன்றுவதைக் காணலாம்.

Leave A Reply

Your email address will not be published.