யாழில் வீடுடைத்து 3 இலட்சம் ரூபா பணமும் மூன்றரைப் பவுண் நகையும் ‘அபேஸ்’.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 3 இலட்சம் ரூபா பணமும் மூன்றரைப் பவுண் நகையும் திருடப்பட்டுள்ளது என்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்வயல் பகுதியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணவன் மேசன் வேலைக்குச் சென்றுள்ள நிலையில் மனைவி அருகிலுள்ள காணிக்கு ஆட்டைக் கட்டி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்கதவின்பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்துவிட்டு, உள்ளே சென்று பார்த்தபோது 3 இலட்சம் ரூபா பணமும், மூன்றரைப் பவுண் நகையும் திருடப்பட்டமை தெரியவந்தது.

Leave A Reply

Your email address will not be published.