‘விமானம் இல்லாமல் கூட மோடி போவார், அதானி இல்லாமல் போக மாட்டார்’ – உதயநிதி கிண்டல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி விமானம் இல்லாமல் கூட போவார். ஆனால் அதானி இல்லாமல் போக மாட்டார் என தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் குன்றத்தூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.அந்த நிகழச்சியில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

பின்பு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய உதயநிதி, “திமுகவிற்கும், அதிமுகவிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. அப்போது, எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை நடத்திய அதிமுக கோடிக்கணக்கில் செலவு செய்தனர். ஆனால், இப்போது அப்படி இல்லை. தற்போது நடந்து கொண்டிருப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி” என்றார்.

மேலும் பேசிய அவர், “இந்திய பிரதமர் நரேந்திர மோடி விமானம் இல்லாமல் கூட போவார். ஆனால் அதானி இல்லாமல் போக மாட்டார். அதிமுகவும் பாஜகவும் கூட்டு களவாணிகள். மோடியின் நெருங்கிய நண்பர் அதானி என்பதால் பாஜக ஆட்சியில் அதானி குடும்பம் மட்டும் தான் வாழ்ந்து வருகிறது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”நாங்கள் எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை. இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம்.

இந்தி பிரச்சார சபா தி.நகரில் உள்ள பாஜக அலுவலகம் அருகில் தான் இருக்கிறது. அங்கு சென்று இந்தி கற்றுக்கொள்ள வேண்டியது தானே. மீண்டும் முதுகெலும்பு என்றால் தெரியாது என்பதை அதிமுக உறுதி செய்துள்ளது” என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.