சரிகமபவில் அசத்திய மலையக குயில் அசானி: பாடல் Video இணைப்பு

இந்திய Zee Tamil (ஜி தமிழ்) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்வில் பங்கேற்றுள்ள புசல்லாவை, நயாபன பகுதியை சேர்ந்த அசானி என்ற மாணவி பலரது ஆதரவோடு தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் தாமதமாக போய் இணைந்து பாடி வருகிறார்.

அவரது மாற்றத்தை கண்டு பலரும் வியப்பதோடு , தமிழக மக்கள் அவருக்கு ஆதரவும் வழங்கி வருகிறார்கள்.
குறிப்பாக Zee Tamil (ஜி தமிழ்) தொலைக் காட்சியும் , சரிகமப நடுவர்களும் , பயிற்சியாளர்களும் , பங்கு பற்றியுள்ள போட்டியாளர்களும் அவரை நேசிக்கத் தொடங்கியுள்ளனர். இதில் அசானி குறித்து தகவல்களை வழங்கும் நிகழ்ச்சி தொகுப்பாளரான அர்ச்சனா அவர்கள் மக்களை ஈர்க்கும் விதத்தில் அவருக்கு ஆதரவு கரம் கொடுத்து வருகிறார். நடுவர்களான பாடகர் ஶ்ரீநிவாஸ் மற்றும் நடிகை அபிராமி போன்றோர் வியந்து அவரை பாராட்டுகின்றனர்.

அவர் கடந்த வாரம் பாடிய பாடல் பலரை மெய் மறக்க வைத்துள்ளது.
அதை இங்கே காணலாம்:

Leave A Reply

Your email address will not be published.