பயிற்சிக்காக இராணுவ முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள்!

அம்பாறை மாவட்டத்தில் நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஏ. அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்

இதற்கமைய, பொதுத்துறை, முகாமைத்துவத்துறை, தனியார்துறை மற்றும் திட்ட வேலைகள் துறை ஆகிய துறைகளில், சகல பட்டதாரி பயிலுனர்களுக்கும் மூன்று வார கால பயிற்சிகள் 04 குழுக்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் வழங்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவதாக தெரிவு செய்யப்பட்ட பெண் பட்டதாரி பயிலுனர்களுக்கு அம்பாறை கொண்டவட்டுவான் இராணுவ பயிற்சிப் பாடசாலையிலும், ஆண் பட்டதாரி பயிலுனர்களுக்கு மின்னேரியா இராணுவ பயிற்சிப் பாடசாலையிலும் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும் இடங்கள், பயிற்சிக்கான கால அட்டவணை, பௌதீக மற்றும் ஆளணி வளங்கள் தொடர்பாக குறித்த பயிற்சிகளுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகளால் விளக்கமளிக்கப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஏ.அப்துல் லத்தீப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

– Sathasivam Niroja

Leave A Reply

Your email address will not be published.