பிரியங்கா சோப்ராவின் ஒரு Instagram பதிவுக்கு 532,000 டாலர்!

இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா தமது Instagram கணக்கில் செய்யும் ஒரு பதிவுக்கு கிடைக்கும் தொகை சுமார் 532,000 டாலர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக நிர்வாக தளமான Hopper HQ அந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பட்டியலின் 29ஆவது இடத்தில் இருக்கும் 41 வயது சோப்ராவை 88.8 மில்லியனுக்கும் அதிகமானோர் Instagram-இல் பின்தொடர்கின்றனர்.

14ஆம் இடத்தில் இந்தியக் கிரிக்கெட் வீரர் வீராட் கோலி உள்ளார்.

அவரின் ஒரு பதிவின் விலை சுமார் 1.38 மில்லியன் டாலர்.

ஏறத்தாழ 255 மில்லியன் பேர் 34 வயது கோலியின் Instagram பக்கத்தைப் பின்தொடர்கின்றனர்.

முதல் இடத்தில்… பிரபல காற்பந்து விளையாட்டாளர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

ஒரு பதிவு: 3.23 மில்லியன் டாலர்

Instagram தளத்திலேயே 38 வயது ரொனால்டோவை ஆக அதிகமாக 601 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

2ஆவது இடத்தில்:

லயனல் மெஸ்ஸி, 36 வயது

ஒரு பதிவு: 2.6 மில்லியன் டாலர்

கணக்கைப் பின்தொடர்பவர்கள்: 483 மில்லியன்

Leave A Reply

Your email address will not be published.