குடாவெல்ல படகு உரிமையாளரைக் சுட்டுக் கொன்ற கூலி கொலையாளி கடற்படை சிப்பாய் கைது

தங்காலை குடுவெல்ல பிரதேசத்தில் கடந்த 15ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட, பல படகுகளுக்கு உரிமையாளரான நிமேஷ் ரங்கா, விசேட அதிரடிப்படையினரால் நேற்று (20) பலப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் புல்மோட்டை ரன்வேலி கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை சிப்பாய் என தெரிவிக்கப்படுகிறது.

சேவையிலிருந்து விடுமுறையில் சென்றிருந்த வேளையில் இந்தக் கடற்படைச் சிப்பாய் இந்தக் கொலையைச் செய்துள்ளதாகவும், வெளிநாட்டிலுள்ள பாதாள உலகச் செயற்பாட்டாளர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் கொலை நடந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை ஒப்பந்தத்தை வழங்கியவர் தென்னிலங்கையில் பிரபல போதைப்பொருள் வியாபாரியான ரத்கம விதுரவின் சீடரான டில்ஷான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த போது பகுதி நேர வேலையாக கொலையை செய்த கடற்படை சிப்பாய் பலபிட்டியவில் உள்ள , அவரது வீட்டில் இருந்து வாகனம் ஒன்றின் மூலம் தங்காலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தங்காலையில் இருந்து குடாவெல்ல நோக்கி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இலக்கை நோக்கி முச்சக்கர வண்டி ஒன்றின் மூலம் வழிநடத்தப்பட்டுள்ளார். இதன்போது பாவிக்கப்பட்ட முச்சக்கர வண்டியும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, ​​கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கொலைக்கு முந்தைய நாள் கிடைத்ததாகவும், ஒப்பந்தத்தை கொடுத்த டில்ஷான் என்ற கடத்தல்காரன் பலப்பிட்டியில் உள்ள மின்கம்பத்தின் கீழ் துப்பாக்கியை வைக்க அறிவுறுத்தியதாகவும் கடற்படை சிப்பாய் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்படுவதற்கு முன்னைய நாள் தம் கையில் துப்பாக்கி கிடைத்ததாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூட்டை நடத்திய கடற்படை சிப்பாய் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு முடிந்து பலப்பிட்டிக்கு வந்தபோது, ​​தில்ஷான் தன்னை அழைத்து பலப்பிட்டியில் உள்ள மின்கம்பத்திற்கு அருகில் துப்பாக்கியை விட்டுச் செல்லுமாறு கூறியதாகவும், அதன்படி ஆயுதத்தை அங்கேயே விட்டுச் சென்றதாகவும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட நபரிடம் ஆழ்கடலில் இருந்து போதைப்பொருள் கடத்துமாறு பலமுறை கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அவர் அதனை செய்ய முடியாது என மறுத்ததாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், கொலைக்கு காரணமான சம்பவம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று புலனாய்வுத் துறை மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.