அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் – தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

கோயிலின் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோவில் நிர்வாக அதிகாரி கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து அங்கு பணிபுரிந்து வந்த முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ஒரு கோவிலின் ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சிப் பெற்ற, எவராக இருந்தாலும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தீர்ப்பளித்திருந்தார்.

அந்த தீர்ப்பை எதிர்த்து முத்து சுப்பிரமணிய குருக்கள் சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்த நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து முத்து சுப்ரமணிய குருக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ்வர் மற்றும் பரிதிவாலா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற எந்த சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.